1000 முதலீட்டில் தொடங்கும் கடற்கரை வியாபாரம்
கடற்கரை என்பது சூரியஒளியும், மணலும், கடலின் அலையும் நிறைந்த ஓய்வூட்டும் இடமாகும். அது சுற்றுலா பயணிகளையும் உள்ளூர் மக்களையும் ஈர்க்கும் ஒரு அழகான தளமாக விளங்குகிறது.
கடற்கரை இயற்கை ரசிக்கும் இடமாக மட்டுமின்றி, வணிக வாய்ப்புகளுக்கும் ஒரு சிறந்த தளம் ஆகும். மக்கள் கூட்டம் அதிகமாகும் இடத்தில், வியாபாரங்கள் வளர்ச்சியடைய வாய்ப்பு அதிகம்.
கடற்கரையில் வியாபாரம் தொடங்குவது மிகவும் சிறந்த யோசனை, ஏனெனில் அது சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் அதிகமாக செல்கிற இடமாகும். குறிப்பாக சீசன் நேரங்களில், கடற்கரை வியாபாரத்திற்கு வருவாய் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
Low Investment Thiruneeru Making Business Ideas in Tamil Click Here
கீழே சில முக்கியமான கடற்கரை வியாபார யோசனைகள் மற்றும் தகவல்கள் உள்ளன
- பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை
- உணவுப்பொருள் மற்றும் சிற்றுண்டி விற்பனை
- கைவினை பொருட்கள் விற்பனை
- வாடகை மற்றும் புகைப்பட சேவை
- அழகு மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை
பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை
- சூடான பானங்கள் டீ, இஞ்சி டீ, சுக்கு காப்பி ஆகிய பானங்கள் தயாரித்து விற்பனை செய்யலாம்.
- குளிர்சாதன பானங்கள் ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, தண்ணீர் பாட்டில்கள், சோடா மற்றும் ஜூஸ்கள் விற்பனை செய்யலாம் வெப்பமான காலங்களில் இது மிகவும் லாபகரமாக இருக்கும்.
- சிறிய முதலீட்டு அளவில் ₹500 - ₹1000 முதலீட்டில் தொடங்கலாம் இவைகள் குறைந்த முதலீட்டில் தொடங்கி நல்ல வருமானம் தரும்.
உணவுப்பொருள் மற்றும் சிற்றுண்டி விற்பனை
- சுண்டல், சமோசா, பாணிபுரி, மசாலா கார்ன், மசாலா பட்டாணி, சிறு பழ வகைகள் விற்பனை செய்யலாம். இதற்கு தேவையான கச்சா பொருட்கள் ₹1000க்குள் கிடைக்கும்.
- கடற்கரை பார்வையாளர்களிடம் விரும்பப்படும் உணவுப்பொருட்கள்.
கைவினை பொருட்கள் விற்பனை
- கடற்கரை முத்து, கல் மற்றும் சுருளியால் செய்யப்பட்ட அணிகலன்கள், கைபிடி பைகள் மற்றும் உள்நாட்டு நினைவுச் சின்னங்கள் சுற்றுலா பயணிகள் இவற்றை வாங்க விரும்புவார்கள்.
- இவைகளுக்கான முதலீடு மிக குறைவு ஆகும்.
வாடகை மற்றும் புகைப்பட சேவை
- குடை குறுகிய நேரம் வீடியோ கேமரா போன்ற வாடகை சேவைகள் செய்யலாம்.
- சுற்றுலா பயணிகளின் புகைப்படம் எடுக்கும் சேவை. உடனடியாக பிரிண்ட் செய்து வழங்கலாம். பார்வையாளர்களுக்கு கடற்கரை அனுபவத்தை நினைவாக வைக்க உதவும். போட்டோகிராஃபியில் திறமை இருந்தால் அதிக வருவாய் கிடைக்கும்.
அழகு மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை
- சிறிய பந்துகள், பலூன்கள், கைகடிகாரங்கள், தொப்பி, கண்ணாடி போன்ற சூரிய வெளிச்சம் எதிர்ப்பதற்கான பொருட்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் இதனை விரும்பி வாங்குவார்கள்.
- வீட்டுற்க்கு தேவையான அழகு பொருட்கள், சாமி படங்கள் விற்பனை செய்யலாம்.
- இவைகள் குறைந்த முதலீட்டில் தொடங்கி நல்ல வருமானம் தரும்.
கடற்கரை வியாபாரம் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடியது மற்றும் அதிக லாபம் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பாகும். சுற்றுலா பயணிகளின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சரியான வியாபாரம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
உணவுகள், குளிர்பானங்கள், கைவினைப்பொருட்கள், மற்றும் வாடகை சேவைகள் போன்றவை பொதுவாக வெற்றிகரமாக இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தரமான சேவைகளை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற முடியும்.
அதேசமயம், சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியம். சரியான திட்டமிடல் மற்றும் முயற்சியுடன், கடற்கரை வியாபாரம் வெற்றி பெறும், லாபகரமாகவும் நீண்ட காலமாகவும் வளர்ச்சி அடையும்.

.jpg)
.jpg)
.jpg)
.gif)
