கற்பூரம் தயாரிப்பு தொழில் பற்றிய விரிவான விபரம்
சந்தை மதிப்பு
இந்தியா மதம் சார்ந்த நாடு இங்கு ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டின் என அணைத்துதரப்பினரும் வாழ்கின்றர், ஹிந்து ரொம்ப அதிகமா இருக்காங்க அவர்கள் வாழ்வில் கற்பூரம் என்ற ஓன்று தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள். திருவிழா சமயங்களில் அதிகமா தேவைப்படும் பொருள். இதன் மூலப்பொருள் எளிதாக கிடைக்கும். இதை சிறந்த சிறு தொழிலாக எடுத்து தினம் 6000ரூபாய் வரை நம்மால் சம்பாதிக்க முடியும்.. கற்பூரம் தயாரிப்பு குறித்து நீங்கள் பல பதிவு பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த தொழில் செய்யும் முறை, கற்பூரம் வில்லைகளை மார்க்கெட் செய்து நமக்கு கிடைக்கும் வருமானம் மற்றும் வாங்க வேண்டிய இயந்திரம், முறையாக அனைத்தையும் பற்றிய இந்த பதிவில் நாம் அறிய முடியும்.
என்ன இயந்திரம் தேவை
- கற்பூரம் தயாரிக்கும் இயந்திரம் (Champhor making machine)
இயந்திரம் பொறுத்தவரை கற்பூரம் தயாரிக்கும் இயந்திரம் இருந்தால் போதும் அந்த இயந்திரம் India mart எனப்படும் webside மூலம் நாம் வாங்கி கொள்ளலாம். அல்லது சிவகாசி மற்றும் விருதுநகரில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இதன் விலை 65000 முதல் 110000 வரை இருக்கும்.
![]() |
- பேக்கிங் கவர் ஓட்டும் இயந்திரம் (Sealing packing machine)
சீலிங் பேக்கிங் இயந்திரம் ஆன்லைன் மூலமாக வாங்கலாம். 600 முதல் 2000 வரை இருக்கும்
மூலப்பொருள்
- கற்பூர பொடி
கற்பூர வில்லைகள் தயாரிக்க கற்பூர பொடி முதலில் வாங்க வேண்டும்.முன்னாடி எல்லாம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வாங்கினார்கள்.தற்போது பெட்ரோலியம் எனப்படும் திரவம் மூலம் கற்பூர பொடி தயார் செய்கின்றனர் எனவே பெட்ரோல் டீசல் விலை உயரும் போது இந்த மூலப்பொருள் விலை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.தரம் வாய்ந்த கற்பூர பொடியின் விலை 1kg க்கு சுமார் 600 முதல் 1000ரூபாய் வரை மார்க்கெட்டில் கிடைக்குது. உங்க லோக்கல் கெமிக்கல் கடைகளில் நீங்க வாங்கிக்கலாம், அல்லது Indiamart webside ல் வாங்கி கொள்ளலாம்
- பேக்கிங் பிளாஸ்டிக் கவர் or கண்டைனர்
கற்பூர வில்லைகளை பேக் செய்ய காற்று போகாத அளவுக்கு பேக்கிங் செய்ய வேண்டும், அப்போ தான் மார்க்கெட்டிங்ல் நம் பொருளின் சந்தை மதிப்பு அதிகரிக்கும் மற்றும் கற்பூரம் ஆவியாகுதலை தவிர்க்க முடியும்




