நிலக்கடலை மதிப்பு கூட்டு தொழில்
நிலக்கடலையை தேர்ந்தெடுப்பது எப்படி
நிலக்கடலையை தரம் வாரியாக பிரிக்க வேண்டும். வியாபாரியிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,இல்லையென்றால் அந்தந்ந மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம்.இந்த கொள்முதலில் இடைத்தரகர்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
நிலக்கடலையின் தற்போதைய விலை நிலவரம்
நிலக்கடலை (காயந்த கடலை)ஒரு மூடையில் தோராயமாக 30முதல் 35 கிலோ வரை எடை இருக்கும். ஒரு மூடையின் விலை நேரடியாக கொள்முதல் செய்தால் 2100 முதல் 2400 ரூபாய் வரை இருக்கும்.
நிலக்கடலை பேக்கிங் மற்றும் விற்பனை செய்வது எப்படி?
முதலில் பேக்கிங் செய்வதற்க்கான இயந்திரம் நமக்கு தேவை.
இயந்திரத்தின் விலை 55000 முதல் 60000 வரை இருக்கும். இந்த இயந்திரத்தை கையாள்வது மிகவும் எளிதானது.
இந்த இயந்திரத்தில் மணிக்கு 100 கிலோ வரை நிலக்கடலையை பேக்கிங் செய்வதற்கு தயார் செய்து கொள்ளலாம்.
நிலக்கடலையை வெறுமென வறுத்து 100கி,250கி,500கி மற்றும் 1கிலோ வரைக்கும் விற்பனை செய்யலாம்.
நிலக்கடலையை மசாலாவுடன் வறுத்து 100கி,250கி,500கி மற்றும் 1கிலோ வரைக்கும் விற்பனை செய்யலாம்.
நிலக்கடலையை பயன்படுத்தி கடலை மிட்டாய் செய்து விற்பனை செய்யலாம்.
நிலக்கடலையை பட்டாணி மாவுடன் சேர்த்து 100கி முதல் 1கிலோ வரை பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
நிலக்கடலை தொழிலின் இலாபம் எந்த அளவு இருக்கும்?
1 மூடை =30கிலோ முதல் 40கிலோ
விலை=2100ரூ முதல் 2400ரூ
40கிலோ=2300ரூ
1கிலோ=57ரூ
40கிலோ மூடையில் தோராயமாக 10கிலோ தோடாக கழிந்து விடும். இன்றைய தேதி நிலவரப்படி நிலக்கடலை 1கிலோ 100ரூபாயக இருக்கிறது. நீங்கள் 30கிலோ விற்பனை செய்தால் 3000ரூ கிடைக்கும். இந்த 3000ரூபாயில் பேக்கிங்,வேலையாள் மற்றும் டிரான்ஸ்போர்ட செலவு ஒரு கிலோவுக்கு 5ரூ வீதம் கழிந்து விடும். அப்படியென்றால் கிடைத்த 3000ரூபாயில் 150ரூ கழிந்து விடும். மீதி இருக்கும் 2850ரூபாயில் 2300ரூ மூலப்பொருளுக்கு செலவாகி விடும்.
ஆகமொத்தம் 30கிலோ விற்பனை செய்தால் 550ரூ இலாபம் கிடைக்கும். அதாவது ஒரு கிலோவுக்கு 18ரூ இலாபம் கிடைக்கும். அதுபோக நிலக்கடலை தொளி எரிபொருளாக விற்பனை செய்துவிடலாம்.
.jpeg)