மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில்
மரவள்ளிக்கிழங்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் இடங்கள்
- நாமக்கல்
- தேனி
- மதுரை
- திருநெல்வேலி
- நாகர்கோவில்
இலங்கை நாட்டிலும் மரவள்ளிக்கிழங்கு அதிகமாக பயிரிடப்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு
- மிளகாய்தூள்
- உப்பு
- கடலெண்ணெய்
- மரவள்ளிக்கிழங்கை வட்ட வடிவம் மற்றும் குச்சி வடிவில் கட் செய்வதற்கு இயந்திரம் தேவை.
14000 ரூபாய் , 70000 ரூபாய் 110000 வரை இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரம் முறையே ஒரு மணி நேரத்திற்கு 30கிலோ,400கிலோ வரை சிப்ஸ் உற்ப்பத்தி செய்ய முடியும்.110000 ரூபாய் மதிப்புள்ள இயந்திரத்தில் வட்ட வடிவம் மற்றும் குச்சி வடிவ சிப்ஸ் இரண்டையும் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த இயந்திரம் சாதாரன 230V மின்சாரத்தில் இயங்ககூடியது.
முதலில் நீங்கள் சிறய முதலீடு செய்து தொழில் துவங்குவதாக இருந்தால் 250ரூபாய் மதிப்புள்ள சிலைசர் வாங்கிகொள்ளவும்.
செய்முறை
- மரவள்ளிக்கிழங்கு 30கிலோ
- மிளகாய்தூள் 250 கிராம்
- தேவையான அளவு உப்பு
மரவள்ளிக்கிழங்கு விற்பனை செய்ய எந்த மாதிரியான உரிமம் வேண்டும்
- முதலில் குடிசைத்தொழிலாக இருந்தால் FSSI என்ற சான்றிதழ் பெற வேண்டும்.
- பெரிய அளவில் தொழில் செய்வதாக இருந்தால் GST எண் கட்டாயம் வேண்டும்.
மரவள்ளிக்கிழங்கு தொழிலின் இலாபம்
தோராயமான எடுத்துகாட்டு:
1கிலோ கிழங்கு - 50ரூ
30கிராம் 1பாக்கெட் விலை -10ரூபாய்க்கு கடைகளில் விற்பனை செய்கிறார்கள்.
இதில் நீங்கள் 1 பாக்கெட் 6ரூபாய்கு கடைகளுக்கு கொடுக்கலாம்.
அதுபோக 1கிலோ சிப்ஸ் தயார் செய்தால் அதில் 25 (30 கிராம்) பாக்கெட் தயார் செய்யலாம்.அப்படியென்றால்,
25 *6= 150ரூபாய்
இதில் மின்சாரம், பேக்கிங், மூலப்பொருள்கள் என ஒரு கிலோவுக்கு 70ரூபாய் செலவாகும் என்றால் மீதி 80 முதல் 100ரூபாய் வரை இலாபம்தான்.
சிறிய அளவில் தொழில் செய்வதாக இருந்தால் 1000ரூபாய் இலாபம் பெறலாம்.
பெரிய அளவில் தொழில் செய்வதாக இருந்தால் 10000ரூபாய் இலாபம் பெறலாம்.
.jpeg)
Hi
ReplyDelete